கண்கலங்கிய அமீர்கான்.. மேடையில் போட்டுடைத்த நடிகர் விஷ்ணு விஷால்


Aamir Khan was stunned.. Actor Vishnu Vishal put him on stage
x

சென்னையில், ''ஒஹோ எந்தன் பேபி'' திரைப்படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது.

சென்னை,

''ஒஹோ எந்தன் பேபி'' திரைப்படத்தை பார்த்துவிட்டு அமீர்கான் கண்கலங்கியதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னையில், ''ஒஹோ எந்தன் பேபி'' திரைப்படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது. இயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி, ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள நிலையில், பாலிவுட் நடிகை மிதிலா பால்கார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். விழாவில் பேசிய விஷ்ணு விஷால் தன் தம்பியின் படத்தை அமீர்கான் பார்த்து கண்கலங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடையை தயாரிப்பில் ராட்சசன் 2 மற்றும் கட்டா குஸ்தி 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story