பாடகி சுசித்ரா மீது ஆர்த்தியின் தந்தை புகார்

ஆர்த்தி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் சுசித்ரா பேசுவதாக புகாரில் தெரிவித்திருக்கிறார்.
சென்னை,
பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தியின் தந்தை புகாரளித்திருக்கிறார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தம்பதி சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் ரவி மோகன் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாடகி கெனிஷாவுடன் கலந்துகொண்டார். இந்த விவகாரம் மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ஆர்த்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடகி சுசித்ரா பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தியின் தந்தை புகாரளித்திருக்கிறார்.
ஆர்த்தி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் பேசுவதாக சுசித்ராவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் புகாரளித்திருக்கிறார்.






