

நானி - ஸ்ரீகாந்த் ஒடெலா இணைப்பில் வெளியான படம் ‘தசரா’. இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘தி பாரடைஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ’ஆயா ஷேர்’ புரோமோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இதன் காட்சியமைப்புகள், நானியின் கெட்டப் என இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. முழு பாடல் நாளை வெளியாக உள்ளது.
எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.