நடிப்பு வராது... தெரியவும் தெரியாது - ஹீரோ அவதாரம் குறித்த வதந்திகளுக்கு சாய் அபயங்கர் பதிலடி

சாய் அபயங்கர் ஏஜிஎஸ் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் காட்டுத்தீயாகப் பரவியது.
நடிப்பு வராது... தெரியவும் தெரியாது -  ஹீரோ அவதாரம் குறித்த வதந்திகளுக்கு சாய் அபயங்கர் பதிலடி
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் தற்போதைய 'மியூசிக் சென்சேஷன்' சாய் அபயங்கர், தான் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாகப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் (AGS Entertainment), சாய் அபயங்கருடன் புதிய புராஜெக்ட் ஒன்றில் இணைவதாகச் சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாகப் பதிவிட்டிருந்தது. இந்தப் பதிவைத் தொடர்ந்து, சாய் அபயங்கர் ஏஜிஎஸ் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் காட்டுத்தீயாகப் பரவியது.

Also Read
ஜூனியர் என்.டி.ஆர் மிஸ் செய்த கதையில் விஜய் தேவரகொண்டா?
நடிப்பு வராது... தெரியவும் தெரியாது -  ஹீரோ அவதாரம் குறித்த வதந்திகளுக்கு சாய் அபயங்கர் பதிலடி

இந்நிலையில், இது பொய்யான தகவல் என சாய் அபயங்கர் கூறி உள்ளார். அவர் பேசுகையில், "நான் ஹீரோவாக அறிமுகமாகிறேன் என்பது முற்றிலும் பொய்யான தகவல். அதில் உண்மையில்லை. ஏஜிஎஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்திற்கு இசையமைப்பாளராக மட்டுமே நான் ஒப்பந்தமாகியுள்ளேன். எனக்கு நடிக்கத் தெரியாது, சொல்லப்போனால் எப்படி நடிக்க வேண்டும் என்பது கூட எனக்குத் தெரியாது. நடிப்பில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் நடனமாடுவேன். சில விஷயங்கள் இயற்கையாகவே வர வேண்டும்" என்றார்.

தற்போது சாய் அபயங்கர் தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்படம் வரும் மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சாய் அபயங்கர் இசையில் வெளியான இப்படத்தின் மூன்று பாடல்களும் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. பான் இந்தியா அளவில் உருவாகும் ’ராக்கா’ படத்திற்கும் அவரே இசையமைத்து வருகிறார்.

தொடர்ச்சியாகப் பெரிய பட்ஜெட் படங்களில் பிஸியாக இருக்கும் சாய் அபயங்கர், தற்போது தனது முழுக் கவனத்தையும் இசையமைப்பதில் மட்டுமே செலுத்தி வருகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com