அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் ! தம்பி ராமையா மகனை மணக்கிறார் !!

கதாநாயகியாக நடித்து வந்த நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் ! தம்பி ராமையா மகனை மணக்கிறார் !!
Published on

சென்னை ,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா 'பட்டத்து யானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான 'சொல்லி விடவா' படத்திலும் நடித்து இருந்தார்.

நடிகை ஐஸ்வர்யாவுக்கும், நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சிக்காக தென் ஆப்பிரிககா சென்றபோது நட்பு ஏற்பட்டு பிறகு காதல் வயப்பட்டு உள்ளனர். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்.

உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 'ராஜாகிளி' என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

தம்பி ராமையா கூறும்போது, "எனது மகன் உமாபதிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்க்க தொடங்கியபோது அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை காதலிக்கும் விஷயத்தை தெரிவித்தார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள்.

இதையடுத்து எனது மனைவியுடன் சென்று அர்ஜுனை சந்தித்து பேசினோம். அவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடத்த இருக்கிறோம். அப்போது திருமண தேதியை முடிவு செய்வோம்.

உமாமதி எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் காட்டும் அக்கறை அர்ஜுனுக்கு பிடித்துள்ளது. எங்கள் மருமகளாக ஐஸ்வர்யாவை வரவேற்க மகிழ்ச்சியோடு காத்து இருக்கிறோம்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com