நடிகர் பிஜு மேனன் ரூ.15 லட்சம் இழப்பீடு தர வேண்டும்; தயாரிப்பாளர்கள் சங்கம்

நடிகர் பிஜு மேனன் ரூ.15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நடிகர் பிஜு மேனன் ரூ.15 லட்சம் இழப்பீடு தர வேண்டும்; தயாரிப்பாளர்கள் சங்கம்
Published on

திருவனந்தபுரம்,

மலையாள நடிகர் பிஜு மேனன். இவர் நடித்த நடந்த சம்பவம் என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தெரி கிறது. இதுகுறித்து அந்த படத்தின் தயாரிப்பாளரான அனுப் கண்ணன் தனக்கு ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக கூறி மலையாள திரைப்பட தயா ரிப்பாளர்கள் சங்கத்தில் கடிதம் அளித்துள்ளார்.

அதில், நடிகர் பிஜு மேனன் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக 10 நாட்கள் ஒதுக்கி தருவதாக கையெழுத்திட்டு இருந்தார். ஆனால், அவர் 2% மணி நேரம் மட்டுமே செலவிட்டு உள்ளார். இதனால் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கொச்சியில் நிருபர்களிடம் கூறும்போது, திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காத நடிகர் பிஜு மேனன் ரூ.15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்றனர். இவ்வாறு அவர் தரவில்லையென்றால், பிஜு மேனன் நடித்து வரும் மற்றொரு படத்தை தயாரிக்கும் லிஸ்டின் ஸ்டீபன் என்பவர், அவரது சம்பளத்தில் இருந்து ரூ.15 லட்சம் பெற்று அனுப் கண்ணனுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com