திருவண்ணாமலை கோவிலில் நடிகர் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி சாமி தரிசனம்

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள "டீசல்" படம் நாளை வெளியாக உள்ளது.
திருவண்ணாமலை கோவிலில் நடிகர் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி சாமி தரிசனம்
Published on

திருவண்ணாமலை,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இந்த படத்தினை சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ளார். இதில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை அதுல்யா உள்ளிட்ட படக்குழுவினர் "டீசல்" படம் வெற்றியடைய திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com