மின்வெட்டு பிரச்சினை குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அளித்த பேட்டி சர்ச்சை

மாஸ்டர் மகேந்திரன், விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்தவர்.
மின்வெட்டு பிரச்சினை குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அளித்த பேட்டி சர்ச்சை
Published on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன். 1994-ல் வெளியான நாட்டாமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நட்புக்காக போன்ற பல படங்களில் நடித்த பிறகு 'விழா' படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். ‘மாஸ்டர்’ படத்தில் சிறு வயது விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.அண்மையில், இவர் நடிப்பில் வெளியான 29 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மகேந்திரன் ரஜினிகாந்தின் 'முத்து', 'படையப்பா' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மகேந்திரனிடம் சென்னையில் அடிக்கடி மின்சாரத் தடையாவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மகேந்திரன், “ஏன் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கிறீர்கள்..? இவ்வளவு நாள் மின்சார பிரச்சினை இல்லாமல் ஜாலியாக இருந்தீர்கள், இப்போது பிரச்சினை வருகிறது என்றால் ஒரு ஆறு மாதத்திற்குப் பொறுத்துக் கொள்ளக் கூடாதா.? தேவைப்பட்டால் என் வீட்டு மின்சாரத்தை கூட எடுத்துக் கொள்ளுங்கள்.. நான் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது எப்படி எனத் தெரிந்து வைத்துள்ளேன்..மைக் முன்னாடி நின்னு ஏன் இப்படி நடந்துச்சுன்னு கேள்வி கேட்டா உடனே உங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருமா.? நீங்கள் கேள்வி கேட்பதை எப்போது நிறுத்துகிறீர்களோ, அப்போதுதான் உங்களுக்கான பதிலே கிடைக்கும்” என்றார்.

மகேந்திரனின் இப்பேச்சு பலரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதம் நீங்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்வீர்களா? என மகேந்திரனைக் கடுமையாகத் தாக்கியும் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே அடிக்கடி கரண்ட் கட் ஆவதால் கொதித்துப் போய் இருக்கும் மக்கள், இவரது இந்தத் திமிரான பேச்சால் இன்னும் கோபமாகி உள்ளார்கள் நேற்று முதல் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். விஜய்க்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் இப்படி பேசுவது தவெக கட்சியினரிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com