“கராத்தே பாபு” படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் நாசர்

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவிமோகன் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ படம் வரும் கோடைவிடுமுறையில் வெளியாகிறது.
“கராத்தே பாபு” படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் நாசர்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

ரவி மோகனின் 34-வது படமான ‘கராத்தே பாபு’ படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் இயக்குனர் பி வாசுவின் மகனான நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் டப்பிங் பணியை ரவி மோகன் கடந்த டிசம்பர் மாதமே நிறைவுசெய்துவிட்டார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில், ‘கராத்தே பாபு’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் நாசர் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் கோடைவிடுமுறையில் வெளியாகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com