உமாபதி ராமையா இயக்கத்தில் நடிக்கும் நடிகர் நட்டி

இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
உமாபதி ராமையா இயக்கத்தில் நடிக்கும் நடிகர் நட்டி
Published on

சென்னை,

பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. இவர் ஆரம்பத்தில் 'அதாகப்பட்டது மகாஜனங்களே' , 'மணியார் குடும்பம்' உள்ளிட்ட படங்களை நடித்தார். பின்னர் இயக்குனராக களமிறங்கினார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் "ராஜாகிளி" என்ற படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், உமாபதி ராமையா புதிய படம் ஒன்றினை இயக்க உள்ளார். அதில் நடிகர் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்திற்கு நடிகர் தம்பி ராமையா கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். அரசியல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, கிங்ஸ்லே, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், வீஜே ஆண்ட்ரூஸ், சத்யன், ஜாவா சுந்தரேசன், வடிவுக்கரசி, சாந்தினி தமிழரசன், ஸ்ரீத்தா ராவ் ஆகியோர் நடிக்க உள்ளனர். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com