தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக முதல் படத்தைத் தயாரித்து வருகிறார்.
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்
Published on

2019-ம் ஆண்டில் வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் ஜெயம் ரவி, காஜல்அகர்வால் ஆகியோர் நடித்தனர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்தப் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. 'டிராகன்' மற்றும் 'டியூட்' ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரு.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்த எல்ஐகே திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அடுத்ததாக, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனே தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. நாயகியாக மமிதா பைஜூ நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com