நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் காலமானார்

இன்று மாலை அவருடைய இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் காலமானார்
Published on

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை இயல்பாக வெளிப்படுத்தும் திறமையால் தனி அடையாளம் பெற்றவர்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா (வயது 86), சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) மாலை அவருடைய இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com