வைரலாகும் நடிகர் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ்

நடிகர் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Premji's wedding invitation goes viral
Published on

சென்னை,

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி . இவர் 'சென்னை 600028 - 1 மற்றும் 2, கோவா, சரோஜா, சந்தோஷ் சுப்ரமணியம், மங்காத்தா, மாநாடு'' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனான இவர் 45 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.

இதனால் இவரை'எப்போது திருமணம்?' என்ற கேள்வி துரத்த இந்த வருடம் நிச்சயம் திருமணம் செய்துகொண்வேன் என்ற உறுதி கொடுத்திருந்தார். இப்போது சொன்னபடி அவருக்கு திருமணம் நடக்க உள்ளது.

இந்து என்ற பெண்ணுடன் அடுத்த மாதம் 9 அன்று திருமணம் நடக்க இருக்கிறது. இந்த பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் நடக்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com