நடிகர் புகழ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

லட்சுமி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் புகழ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
நடிகர் புகழ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்
Published on

சென்னை,

தமிழ் சின்னத்திரையில் முதலில் சாதித்து பின் வெள்ளித்திரை வந்தவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் நடிகர் புகழ். இவர் 'குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்' என்ற நிகழ்ச்சிகளில் தனது திறமையை நிரூபித்து அதன்மூலம் திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்.

அந்த வகையில், "எதற்கும் துணிந்தவன், டிஎஸ்பி, அயோத்தி' உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பை பெற்றது. தற்போது கதையின் நாயகனாக 'மிஸ்டர் ஜூ கீப்பர் ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து, புதிய படம் ஒன்றில் நடிக்க புகழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, லட்சுமி மூவி மேக்கர் நிறுவனம் இந்த புதிய படத்தினை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com