சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்....மகிழ்ச்சியில் மக்கள்


Actor Raghava Lawrence fulfills the boys request...People rejoice
x

"மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி, அதன் மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

புதுகோட்டை ,

பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்துவந்த நடிகர் ராகவா லாரன்ஸ், "மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி, அதன் மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ்.ஜே. சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், புதுகோட்டை மாவட்டம் குருக்குலையா பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை நடிகர் ராகவா லாரன்சால் துவக்கி வைத்தார். முன்னதாக அந்த கிராமத்தை சேர்ந்த விஷ்ணு என்ற மாணவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தனது ஊர் மக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

இதைக்கேட்ட ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை நிதியிலிருந்து குடிநீர் சுத்திகரிப்பு பிளான்ட் அமைத்துக் கொடுத்து அதை துவக்கி வைத்தார். இதனையடுத்து கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

1 More update

Next Story