ரவி மோகன் இயக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு


ரவி மோகன் இயக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு
x
தினத்தந்தி 26 Aug 2025 2:10 PM IST (Updated: 26 Aug 2025 2:13 PM IST)
t-max-icont-min-icon

ரவி மோகன் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார்.

சென்னை,

ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் ரவிமோகன் துவங்கியுள்ளார். அதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, நடிகை ஜெனிலியா, ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை ரவி மோகன் தயாரிக்க உள்ளார். அதில், முதல் படமாக ரவி மோகன் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கிறார்.

ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இப்படத்தின் நாயகனாக நடிகர் யோகி பாபு நடிக்கிறார். படத்திற்கு, ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனப் பெயரிட்டுள்ளனர். படத்திற்கான புரமோ படப்பிடிப்பும் முடிந்ததாக ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

1 More update

Next Story