"ஸ்வீட்ஹார்ட்" படத்தின் "டார்ச்சர் புரோ மேக்ஸ்" பாடல் வெளியானது

யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்த ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனைத்தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'ஜோ' திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம காதல், ஹை ஆன் லவ், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.பியார் பிரேம காதல் படத்தைத் தவிர மற்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தயாரித்த அனைத்து படங்களும் ரசிக்கக்கூடிய வகையிலேயே உருவாகியிருந்தன.

தற்போது ரியோ ராஜ், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைக்கும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் புரோமோ பாடலான 'டார்ச்சர் ப்ரோ மேக்ஸ்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார். யுவன், அறிவு, தன்வி ஷா இணைந்து பாடியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com