ஸ்கிரீன் டெஸ்டுக்கு ரூ.8.3 கோடி சம்பளம் பெற்ற நடிகர் ராபர்ட் பாட்டின்சன்

40 வயதாகும் பிரிட்டிஷ் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், அடுத்த ஜேம்ஸ் பாண்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கிரீன் டெஸ்டுக்கு ரூ.8.3 கோடி சம்பளம் பெற்ற நடிகர் ராபர்ட் பாட்டின்சன்
Published on: 

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கான ஸ்கிரீன் டெஸ்டில் பங்கேற்றதற்காக ராபர்ட் பாட்டின்சனுக்கு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.8.3 கோடி வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஜேம்ஸ் பாண்ட்

உலகம் முழுவதும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று 'ஜேம்ஸ் பாண்ட் 007'. இந்த உளவாளி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகர்களிடையே எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

26-வது ஜேம்ஸ் பாண்ட் படம்

டேனியல் கிரேக் நடித்த கடைசி ஜேம்ஸ் பாண்ட் படத்துக்குப் பிறகு, அடுத்த நடிகர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்த நிலையில், தற்போது 40 வயதாகும் பிரிட்டிஷ் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், அடுத்த ஜேம்ஸ் பாண்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 26-வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'பாண்ட் 26' படத்தை 'டியூன்' படப்புகழ் இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ் இயக்கவுள்ளார்.

ஸ்கிரீன் டெஸ்டுக்கு ரூ.8.3 கோடி?

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கான ஸ்கிரீன் டெஸ்டில் பங்கேற்றதற்காக ராபர்ட் பாட்டின்சனுக்கு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.8.3 கோடி வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தடுத்த மூன்று ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு 76 முதல் 98 மில்லியன் அமெரிக்க டாலர் வரை சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்கள் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

X