மான் வேட்டையாடிய வழக்கு நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. #BlackBuckPoachingCase
மான் வேட்டையாடிய வழக்கு நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை
Published on

ஜெய்ப்பூர்

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 1998-ம் ஆண்டு இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலிகான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த ராஜஸ்தான் ஐகோர்ட், சல்மான் கான் மான் வேட்டை ஆடியதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

அதை தொடர்ந்து, இவ்வழக்கில் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, ராஜஸ்தான் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. ராஜஸ்தான் மேல் முறையீட்டினை தொடர்ந்து, நேற்று சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்நிலையில் 20 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது. தீர்ப்பையொட்டி பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சாயிப் அலிகான் உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கியது மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com