'உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்தான் ப்ளூ ஸ்டார்' - சாந்தனு உருக்கம்

ப்ளூ ஸ்டார் படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது.
'உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்தான் ப்ளூ ஸ்டார்' - சாந்தனு உருக்கம்
Published on

சென்னை,

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. இந்த படம் குறித்து நடிகர் சாந்தனு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு உள்ளார். அவர் அந்த பதிவில், 'சக்கரகட்டி முதல் ப்ளூ ஸ்டார் வரையிலான இந்த பயணம் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. பல்வேறு விதமான உணர்வுகளையும் கொடுத்துள்ளது.

வாழ்க்கையில் பல மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்துள்ளது. இனி எப்பொழுதும் பாசிடிவிட்டி தான். உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்தான் ப்ளூ ஸ்டார். இன்று முதல் உலகமெங்கும் வெளியாகிறது. சென்று பாருங்கள்... உங்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும். ஜெய்க்கிறோம்' என பதிவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com