நடிகர் ஷரத் கபூர் மீது பாலியல் குற்றச்சாட்டு


நடிகர் ஷரத் கபூர் மீது பாலியல் குற்றச்சாட்டு
x

பாலிவுட் நடிகர் ஷரத் கபூர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு செய்துள்ளார்.

மும்பை,

'லக்ஷ்மண் ரேகா' படத்தின் மூலம் பாலிவுட்டில் உதவி இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் ஷரத் கபூர். பின்னர் இவர் 'கார்கில் எல்ஓசி மற்றும் லக்ஷ்யா' ஆகிய படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஷாருக்கான் நடித்த 'ஜோஷ்' படத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், நடிகர் ஷரத் கபூர் மீது, தவறான நடத்தை மற்றும் ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்ட குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, நடிகர் ஷரத் கபூர் மீது 32 வயதான பெண் ஒருவர் மும்பை கர் போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

அதில், ஷரத் கபூர் தன்னை தனது வீட்டிற்கு அழைத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார், அங்கு அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், வலுக்கட்டாயமாக தகாத முறையில் அவளைத் தொட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் போலீசார் ஷரத் கபூரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story