

சென்னை,
நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய விதத்தில் தைரியமாக தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் நபர். இந்நிலையில் அவர் தனது டுவிட்டரில் புதிய கருத்து ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
நடிகர் சித்தார்த், பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் ஏமாற்றி வருகின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, காலங்காலமாக தயாரிப்பாளர்கள் ஏமாற்றி வருகின்றனர். எல்லா மொழிப் படங்களுக்கும் இதே நிலை தான் உள்ளது.இந்தியா முழுவதும் இந்த நேர்மையற்ற செயல் நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த 15 ஆண்டுகளாக பயமின்றி வாழ்ந்து வருகிறேன். நிஜ வாழ்க்கையில் உங்கள் மனதின் குரல் படி நடந்துகொண்டால் நீங்கள் அதற்கான விளைவுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
முன்னதாக நடிகர் சித்தார்த், திரையரங்குகளில் ஒரு நாளில் குறைந்த அளவிலான காட்சிகள் மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்ற ஆந்திர மாநில அரசின் அறிவிப்பை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.