“மெளனம் பேசியதே” ரீ-ரிலீஸாவதையொட்டி வீடியோ வெளியிட்ட சூர்யா

சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘மௌனம் பேசியதே’ படம் வருகிற 13ந் தேதி ரீ-ரிலீஸாகிறது.
“மெளனம் பேசியதே” ரீ-ரிலீஸாவதையொட்டி வீடியோ வெளியிட்ட சூர்யா
Published on

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற 13ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை 2002-ம் ஆண்டு அமீர் இயக்கி இருந்தார். திரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘மெளனம் பேசியதே’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆவதை முன்னிட்டு, வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதில், ‘மெளனம் பேசியதே’ படத்தின் பிரபல வசனத்தை சூர்யா பேசியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com