லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக நடிகர் தாடி பாலாஜி அறிவிப்பு

தவெக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட தாடி பாலாஜி , பொறுப்பு வழங்கப்படாததால் தவெகவில் இருந்து விலகி ஜோஸ் சார்லஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக நடிகர் தாடி பாலாஜி அறிவிப்பு
Published on

விஜய்யின் தவெகவில் இருந்து விலகி ஜோஸ் சார்லஸ் கட்சியில் நடிகர் தாடி பாலாஜி கடந்த ஆண்டு இணைந்தார். லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் ஜேசிஎம் அமைப்பு தொடங்கி நடத்தி வந்தார். சமீபத்தில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கினார். தவெகவில் முக்கிய புள்ளியான ஆதவ் அர்ஜூனாவை ஜோஸ் சார்லஸ் கடுமையாக விமர்சித்திருந்தார்.

லட்சிய ஜனநாயகக் கட்சியின் பரப்புரை பொதுச் செயலாளராக நடிகர் தாடி பாலாஜி கடந்த ஆண்டுஜோஸ் சார்லஸால் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், லட்சிய ஜனநாயக கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் கட்சியிலிருந்து தான் முழுமையாக விலகுவதாக நடிகர் தாடி பாலாஜி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்கி ஓராண்டிற்குள்ளாகவே ஒரு முக்கிய பிரபலம் அதிரடி முடிவை எடுத்து வெளியேறியிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தவெக கட்சி தொடங்கப்பட்ட சிலநாட்களிலேயே அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட தாடி பாலஜி, தவெகவுக்கு ஆதரவாக பேசியும் பொறுப்பு வழங்கப்படாததால் விரக்தியில் இருந்தார். பின்னர் தவெகவையே விமர்சனம் செய்யத் தொடங்கினார். தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை தாடி பாலாஜி பச்சைக் குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com