முதல்-அமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்த நடிகர் விஜய் சேதுபதி

திரையரங்கு டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்த நடிகர் விஜய் சேதுபதி
Published on

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு, அனந்திதா, சஞ்சனா எனப் பலரும் நடித்துள்ள படம் ‘பரிமளா & கோ’. மே 28ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி, விமல், சீமான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் விஜய் சேதுபதி பேசியபோது முதல்-அமைச்சர் விஜய்க்கு கோரிக்கையை முன்வைத்தார்.

விஜய் சேதுபதி “மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் விஜய் அவர்களுக்கு ஒரு கோரிக்கை. கமல் சார் கேட்டுக் கொண்டதை போல சீக்கிரம் அரசு சார்பில் ஒரு ஓடிடி துவங்கினால் நன்றாக இருக்கும். திடீரென ஓடிடி சந்தை உருவானது. அதன் வளர்ச்சியும் மிக அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அது திடீரெனச் சரிந்துவிட்டது. இப்போது வியாபாரத்திற்கு எங்கே போவது என்ற குழப்ப நிலையில் இருக்கிறோம். எனவே ஓடிடி என்பதை கொஞ்சம் முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

மேலும் தியேட்டர் டிக்கெட் விலை எல்லாம் ஏற்றி பல காலம் ஆகிவிட்டது. எனவே அதையும் உயர்த்தினால் நன்றாக இருக்கும். இது எனக்குள் பலநாளாக இருக்கும் வேதனை. அதை சொல்ல வேண்டும் என தோன்றியது, இந்த மேடையை அதற்கு பயன்படுத்திக் கொண்டடேன். மற்ற எல்லாமே விலை ஏறிவிட்டது, படம் எடுப்பதற்கான செலவுகளும் அதிகமாகிவிட்டது. ஆனால் டிக்கெட் விலை மட்டும் ரொம்ப வருடமாக அப்படியே இருக்கிறது. அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஓடிடி ஒருபக்கம் இறங்கிவிட்டது, இதை எல்லாம் சரி செய்ய டிக்கெட் விலை ஏற்றினால் நன்றாக இருக்கும்." என்று முன்வைத்தார். இப்போது, திரைப்படத் தொழில் மிகவும் குழப்பமாக இருக்கிறது. வெகு ஆண்டுகளுக்கு முன்பு, திரையரங்கு டிக்கெட் விலைகள் உயர்த்தப்பட்டன. விலை எல்லாம் ரொம்ப ஏறியிருக்கு. எனவே, தயவுசெய்து டிக்கெட் விலைகளை மேலும் உயர்த்துவதை பரிசீலனை பண்ணா நல்லா இருக்கும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com