

சென்னை,
சமூக வலைதளங்களில் பிரபலமான 'எரும சாணி' புகழ் விஜய் குமார், தன் மீதும் தன் மனைவி மீதும் சுமத்தப்பட்ட புகார்கள் குறித்து முதல்முறையாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் மலையாள நடிகை அனுராகா எஸ். நம்பியார், விஜய் குமார் மற்றும் அவரது மனைவி மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார். இது இணையதளங்களில் பேசுபொருளான நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் விஜய் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நடிகை அனுகிரஹா சுமத்தியுள்ள புகார்கள் முற்றிலும் பொய்யானவை. இந்த அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தானும், தன் குடும்பமும் சொல்லொண்ணா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத தனது மனைவிவை இழுத்து, அவமானப்படுத்தியது ஆழமான வேதனையை அளிப்பதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரங்கள் ஏதுமின்றி தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீதிமன்றத்தின் மூலம் உண்மையை நிரூபிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.