முகம் வீங்கி, பல் உடைக்கப்பட்டு... அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய மாடல் அழகி - வீடியோ வைரல்

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முகம் வீங்கி, பல் உடைக்கப்பட்டு... அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய மாடல் அழகி - வீடியோ வைரல்
Published on

மும்பை,

மும்பையில் உள்ள இரவு நேர விடுதி ஒன்றில், பிரபல மாடல் அழகி பிரீத் சிங் தாக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது முகம் வீங்கியிருப்பதையும், பல் உடைந்திருப்பதையும் காட்டி அவர் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"பெண்களுக்கு மும்பை மிகவும் பாதுகாப்பான நகரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனது தோழியுடன் கிளப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பெண் திடீரென எங்களிடம் தகராறு செய்யத் தொடங்கினார்.

Also Read
கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படம்: நாளை வெளியாகும் டைட்டில் , பர்ஸ்ட் லுக்
முகம் வீங்கி, பல் உடைக்கப்பட்டு... அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய மாடல் அழகி - வீடியோ வைரல்

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் எங்களை தாக்கினார். இதில் எனது பல் உடைந்ததுடன், முகம் பலத்த காயமடைந்து வீங்கியது. அங்கிருந்தவர்கள் தடுத்த பிறகுதான் அந்த நபர் நிறுத்தினார்"

சண்டையை தொடங்கிய அந்தப் பெண் ஒரு 'சோஷியல் மீடியா இன்புளூயன்சர்' (Influencer) என்று பிரீத் சிங் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அந்த நபர்களின் பெயர்களை அவர் வெளிப்படையாக கூறவில்லை. "யாரும் இப்படி ஒரு கொடுமையை அனுபவிக்கக் கூடாது" என அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com