சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய நடிகர் விஷ்ணு விஷால்!.. இதுதான் காரணமா?

நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய நடிகர் விஷ்ணு விஷால்!.. இதுதான் காரணமா?
Published on

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன் பின்னர் பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன், லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆர்யன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், இந்த படத்தை விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்திருந்தது. இதன் மூலம் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக ஊடகங்களிலிருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். இரண்டு வானம், கட்டாகுஸ்தி 2 ஆகிய படங்களின் அப்டேட்களுடன் விரைவில் திரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளதுடன், அவரது அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com