“பிளாஸ்ட்” படத்தின் சண்டை காட்சிகளில் நடித்த அனுபவம் பகிர்ந்த நடிகை அபிராமி

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி நடித்த ‘பிளாஸ்ட்’ படம் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
“பிளாஸ்ட்” படத்தின் சண்டை காட்சிகளில் நடித்த அனுபவம் பகிர்ந்த நடிகை அபிராமி
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே ராஜ், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘பிளாஸ்ட்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. திருவனந்தபுரத்தில் பிறந்த நடிகை அபிராமி மலையாளத்தில் நடிக்க தொடங்கி, தமிழில் ‘வானவில்’ படத்தில் அறிமுகமானார். கமலுடன் ‘விருமாண்டி‘ படத்தில் நடித்துள்ளார். பின்னர், பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ‘மகாராஜா’ படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் கவனம் பெற்றார். கடைசியாக ‘ஐபிஎல்’ படத்தில் நடித்திருந்தார்.

நடிகை அபிராமி ‘பிளாஸ்ட்’ படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து பேசும்போது அதற்காக அதிகமாக மெனக்கெட்டதாக வீடியோவில் கூறியுள்ளார். அதில் “இந்தப் படத்தில்தான் முதல்முறையாக ஆக்ஷன் செய்திருக்கிறேன். முடித்த பிறகுதான் இதன் கஷ்டம் புரிந்தது. சண்டைக் காட்சி படப்பிடிப்பில் 2, 3 நாள்கள் கழித்து இயக்குநரிடம், 'நீங்கள் பக்கம் பக்கமாக வசனங்களைக் கூட தாருங்கள் பேசிவிடுகிறேன்; உணர்ச்சிவசப்படும்படியான காட்சிகளில்கூட நடிகிறேன். ஆனால், ஆக்ஷன் கடினமாக இருக்கிறது' என்றேன். அதற்காக தனியாக பயிற்சி எடுக்க வேண்டும். ஒத்திகை செய்ய வேண்டும். அடிப்பது அடித்து விடலாம்; அடிபடாமல் அடிப்பது மிகவும் கடினம். இதன் முழுமையானப் பாராட்டும் சண்டைப் பயிற்சியாளர் பிரபு, அவரது அணியினருக்குத்தான். மிகவும் சுவாரசியமாக இருந்தது. நீங்கள் படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்றார். இப்படம் வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

திருவனந்தபுரத்தில் பிறந்த நடிகை அபிராமி மலையாளத்தில் நடிக்க தொடங்கி, தமிழில் ‘வானவில்’ படத்தில் அறிமுகமானார். கமலுடன் ‘விருமாண்டி‘ படத்தில் நடித்துள்ளார். பின்னர், பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ‘மகாராஜா’ படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் கவனம் பெற்றார். கடைசியாக ‘ஐபிஎல்’ படத்தில் நடித்திருந்தார்.

நடிகை அபிராமி ‘பிளாஸ்ட்’ படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து பேசும்போது அதற்காக அதிகமாக மெனக்கெட்டதாக வீடியோவில் கூறியுள்ளார். அதில் “இந்தப் படத்தில்தான் முதல்முறையாக ஆக்ஷன் செய்திருக்கிறேன். முடித்த பிறகுதான் இதன் கஷ்டம் புரிந்தது. சண்டைக் காட்சி படப்பிடிப்பில் 2, 3 நாள்கள் கழித்து இயக்குநரிடம், 'நீங்கள் பக்கம் பக்கமாக வசனங்களைக் கூட தாருங்கள் பேசிவிடுகிறேன்; உணர்ச்சிவசப்படும்படியான காட்சிகளில்கூட நடிகிறேன். ஆனால், ஆக்ஷன் கடினமாக இருக்கிறது' என்றேன். அதற்காக தனியாக பயிற்சி எடுக்க வேண்டும். ஒத்திகை செய்ய வேண்டும். அடிப்பது அடித்து விடலாம்; அடிபடாமல் அடிப்பது மிகவும் கடினம். இதன் முழுமையானப் பாராட்டும் சண்டைப் பயிற்சியாளர் பிரபு, அவரது அணியினருக்குத்தான். மிகவும் சுவாரசியமாக இருந்தது. நீங்கள் படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்றார். இப்படம் வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com