விஜய் அறிமுகம் செய்த நடிகை மகா கும்பமேளாவில் சந்நியாசம்


விஜய் அறிமுகம் செய்த நடிகை மகா கும்பமேளாவில் சந்நியாசம்
x
தினத்தந்தி 25 Jan 2025 4:50 PM IST (Updated: 25 Jan 2025 5:04 PM IST)
t-max-icont-min-icon

பிரபல நடிகை மம்தா குல்கர்னி மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு சந்நியாசியாக மாறியுள்ளார்.

பிரயாக்ராஜ்,

1990களில் பிரபல பாலிவுட் நடிகையாக திகழ்ந்தவர் மம்தா குல்கர்னி. இவர் 1991-ம் ஆண்டு நடிகர் விஜய் தயாரிப்பில் வெளியான 'நண்பர்கள்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். இந்த படத்தை விஜய்யின் தயார் ஷோபா இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து, இவர்கடைசியாக நடித்த படம் 'முன்னா பாய்'. அதன் பின்னர், சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.

25 ஆண்டுகளுக்கு மீண்டும் இந்தியா வந்த நடிகை மம்தா குல்கர்னி உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு சந்நியாசம் மேற்கொள்ள போவதாக தெரிவித்திருந்தார். அதற்கான தயாரான அவர், முறையான சடங்குகளை செய்து தன்னைச் சந்நியாசியாக மாற்றிக்கொண்டுள்ளார். அவர் தன் பெயரை ஷியாமாய் மம்தாணந்த் கிரி என மாற்றிக் கொண்டார்.

இவர் அடுத்ததாக வாரனாசி மற்றும் அயோத்தி போன்ற புனித நகரங்களுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, இது அனைத்தும் கடவுளின் விருப்பம், அந்த விருப்பத்தை நான் தற்போது நிறைவேற்றி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Next Story