காதலரை கரம்பிடித்த நடிகை ஜனனி

நடிகை ஜனனி தனது காதலரான விமானி சாய் ரோஷன் ஷாமை இன்று திருமணம் செய்து கொண்டார்.
காதலரை கரம்பிடித்த நடிகை ஜனனி
Published on

பாலாவின் ‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து 'தெகிடி', 'பலூன்', 'ஹாட் ஸ்பாட்' என பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஜனனி - சாய் ரோஷன் ஷாம் தம்பதியின் திருமணம் இன்று சென்னைமகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக நடந்தது.இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஜனனி பகிர்ந்துள்ளார் .

X

Daily Thanthi
www.dailythanthi.com