நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ஜனனி... மாப்பிள்ளை யார் தெரியுமா?

'அவன் இவன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி.
சென்னை,
பாலா இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'அவன் இவன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி. இப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வனுடன் 'தெகிடி' படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் பெரிதளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை ஜனனிக்கும் விமானி சாய் ரோஷன் ஷ்யாம் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ஜனனி அறிவித்திருக்கிறார்.
ஜனனிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கும் நிலையில், தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






