நடிகை ஜனனி ஐயர் - சாய் ரோஷன் ஷாம் தம்பதியின் திருமண வீடியோ வெளியீடு

நடிகை ஜனனி ஐயர், சாய் ரோஷன் ஷாம் திருமணம் நேற்று மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
நடிகை ஜனனி ஐயர் - சாய் ரோஷன் ஷாம் தம்பதியின் திருமண வீடியோ வெளியீடு
Published on

பாலாவின் ‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து 'தெகிடி', 'பலூன்', 'ஹாட் ஸ்பாட்' என பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஜனனி - சாய் ரோஷன் ஷாம் தம்பதியின் திருமணம் நேற்று சென்னை மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக நடந்தது.இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் திருமண வீடியோ மற்றும் திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஜனனி பகிர்ந்துள்ளார் .

X

Daily Thanthi
www.dailythanthi.com