'நம்மிடம் எல்லை மீறத்தான் செய்வார்கள்' - அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகை ஓவியா பேச்சு

’பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா, தனது வெளிப்படையான பேச்சால் அனைவராலும் கவரப்பட்டார்.
Image Credits: Instagram.com/happyovi
Image Credits: Instagram.com/happyovi
Published on

சென்னை,

களவாணி, மெரினா, மதயானை கூட்டம், கலகலப்பு, சிலுக்குவார்பட்டி சிங்கம், 90 எம்.எல்., களவாணி-2, காஞ்சனா-3 போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், தனது வெளிப்படையான பேச்சால் அனைவராலும் கவரப்பட்டார்.

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ராஜ பீமா, சம்பவம், பூமர் அங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்மெண்ட் குறித்த கேள்விக்கு துணிச்சலாக பதிலளித்துள்ளார். அந்த பேட்டில் அவர் பேசியதாவது:-

"சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சினை எப்போதுமே இருக்கிறது. ஆனால் இப்போதும் அது தொடர்வது வேதனையாக தான் இருகிறது. சினிமா இவ்வளவு வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனாலும் இந்த பிரச்சினை மட்டும் ஓயவில்லை. எல்லா இடத்திலும் பெண்களை அனுசரிக்க சொல்கிறார்கள். இதற்கு பெண்கள் அப்பொழுதே பதிலடி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

எதையும் மனதில் போட்டு குழப்பிக்காமல், உடனே ரியாக்ஷன் கொடுத்தால் பிரச்சினையே வராது. எதுவாக இருந்தாலும், நமக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை பண்ணவே கூடாது. அப்படி செய்து கிடைக்கும் பலன் தேவையே இல்லை. நிறைய பேர் இப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

சினிமா பாதுகாப்பான துறைதான். ஆனால் நாம் தைரியமாக இருக்க வேண்டும். நம்மை நாமேதான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். சொல்ல வேண்டிய இடத்தில் 'நோ' சொல்ல தெரிய வேண்டும். இல்லை என்றால் நம்மிடம் எல்லை மீறத்தான் செய்வார்கள். யாரும் நம்மை ஏமாற்ற விடக்கூடாது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com