சிறையில் அறையை மாற்றக் கோரிய நடிகை பவித்ரா கவுடா... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பரப்பன அக்ரஹாரா சிறையில் நீதிபதி நேரில் ஆய்வு செய்ய கோரிய நடிகை பவித்ரா கவுடாவின் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறையில் அறையை மாற்றக் கோரிய நடிகை பவித்ரா கவுடா... நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Published on: 

பெங்களூரு,

சிறையில் தன்னை வேறு அறைக்கு மாற்ற உத்தரவிடும்படியும், அத்துடன் சிறையில் இருக்கும் நிலை பற்றி நீதிபதியே சிறைக்கு வந்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிட்டிசிவில் கோர்ட்டில் பவித்ரா கவுடா மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி நேரில் ஆய்வு

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த கொலை வழக்கில் பெங்களூரு 59-வது சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில், சிறையில் தன்னை வேறு அறைக்கு மாற்றும்படி சிறை அதிகாரிகளிடம் பவித்ரா கவுடா கோரிக்கை வைத்தார். இதனை சிறை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து, சிறைவாசம் அனுபவித்து வரும் பவித்ரா கவுடா, சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ள பாரக்கில் நைஜீரியாவை சேர்ந்த பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனக்கு தொல்லை கொடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திப்பதாகவும், அதனால் சிறையில் தன்னை வேறு அறைக்கு மாற்ற உத்தரவிடும்படியும், அத்துடன் சிறையில் இருக்கும் நிலை பற்றி நீதிபதியே சிறைக்கு வந்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிட்டிசிவில் கோர்ட்டில் பவித்ரா கவுடா மனு தாக்கல் செய்திருந்தார்.

பவித்ரா கவுடா மனு தள்ளுபடி

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுஜாதா முன்னிலையில் நடைபெற்று வந்தது. பவித்ரா கவுடாவில் அடைக்கப்பட்டுள்ள சக கைதிகள் பற்றிய தகவல், அவருக்கு அளிக்கும் சலுகைகள் பற்றி அறிக்கை அளிக்க சிறை நிர்வாகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, சிறை நிர்வாகமும் அறிக்கை அளித்திருந்தது. இதனால் பவித்ரா கவுடாவின் மனு மீதான விசாரணை ஏற்கனவே நிறைவு பெற்றதை தொடர்ந்து 23-ந்தேதி (அதாவது நேற்று) தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி, பவித்ரா கவுடாவின் மனு மீது நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது பவித்ரா கவுடாவை சிறையில் வேறு அறைக்கு மாற்றவும், நீதிபதியே நேரில் ஆய்வு செய்ய கோரியதையும் ஏற்க கோர்ட்டு மறுத்துவிட்டது. இதையடுத்து, பவித்ரா கவுடாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

இதற்கிடையில், ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் அனுகுமார் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த கோர்ட்டு 2 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com