

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என தற்போது பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார். கடைசியாக சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, ‘கூலி’ படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாடியிருந்தார். ‘ஜன நாயகன்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
தற்போது, ‘ஹாய் ஜவானி டோ இஷ்க் ஹோனா ஹாய்’ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த இந்தி படத்தை வருண் தவானின் தந்தை டேவிட் தவான் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் பூஜா ஹெக்டே கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்திப் படத்தில் இருந்து 'டேரே ஹோ ஜான்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் அணிந்திருந்த புகைப்படங்களைத்தான் தற்போது பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார். இந்தப் பாடலை பாடியிருந்த ஜோனிடா காந்தி பூஜா ஹெக்டேவின் பதிவில், "ஹாட்டி" எனக் கமெண்ட் செய்துள்ளார்.இந்தப் படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.