நடிகை ராஷி கன்னாவுக்கு அடித்த ஜாக்பாட்


நடிகை ராஷி கன்னாவுக்கு அடித்த ஜாக்பாட்
x

பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள "உஸ்தாத் பகத்சிங்" என்ற படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷி கன்னா. சமீப காலமாக நடிகை ராஷி கன்னா நடித்த பல படங்கள் தோல்வியை தழுவின. தென்னிந்திய திரை உலகில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாலிவுட்டில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார்.

இந்த நேரத்தில் அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல பவன் கல்யாண் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள "உஸ்தாத் பகத்சிங்" என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

அதில், ஒரு கதாநாயகியாக ஸ்ரீ லீலாவும் இன்னொரு கதாநாயகியாக ராஷி கன்னாவும் நடிக்க இருக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து மீண்டும் பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என ராஷி கன்னா நம்புவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story