மகனுடன் ஏழுமலையானை தரிசனம் செய்த ரம்யா கிருஷ்ணன் - வீடியோ வைரல்

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரித்து வருகிறார்கள்.
திருப்பதி,
''பாகுபலி'' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகை ரம்யா கிருஷ்ணன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று காலை நடிகை ரம்யா கிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையானை தனது மகனுடன் தரிசனம் செய்தார்
அப்போது பக்தர்கள் ரம்யா கிருஷ்ணனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல வருடங்களுக்கு மேலாக திரைப்படத் துறையில் வலம் வரும் ரம்யா கிருஷ்ணன், தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது அம்மா, மைத்துனி, மாமியார் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
Related Tags :
Next Story






