‘மீ டூ’ மூலம் டைரக்டர் மீது நடிகை பாலியல் புகார்

மீ டூ மூலம் டைரக்டர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
‘மீ டூ’ மூலம் டைரக்டர் மீது நடிகை பாலியல் புகார்
Published on

தமிழ், தெலுங்கு, இந்தி நடிகைகள் பலர் மீ டூவில் பாலியல் புகார் கூறி வந்தனர். சில வாரங்களாக அமைதியாக இருந்த மீ டூ இப்போது வங்காள மொழி நடிகை அனுரூபாவின் பாலியல் புகாரால் மீண்டும் பரபரப்பாகி உள்ளது. தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

பாவல் இயக்கிய ரொசொகொல்லா படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்தபோது நான் சென்று இருந்தேன். ஒருநாள் போனில் எனக்கு குறுந்தகவல் அனுப்பி, நான் ராதிகா ஆப்தே சாயலில் இருப்பதால் அவரது அடுத்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதாக கூறினார். நேரில் சந்திக்கும்படியும் அழைத்தார்.

நான் மேக்கப் போடாமல் சாதாரண உடை அணிந்து அவரை சந்திக்க சென்றேன். என்னை பார்த்ததும் நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள் என்று கணித்தார். திடீரென்று என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். நான் அதிர்ச்சியாகி அங்கிருந்து ஓடிவிட்டேன். அதன்பிறகு அடிக்கடி போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சி தொல்லை கொடுத்தார்.

இவ்வாறு அவர் உள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து டைரக்டர் பாவல் கூறும்போது, அனுரூபா பொய் புகார் கூறியுள்ளார். நான் எடுத்த 4 படங்களில் 100 பெண்களுக்கு மேல் என்னுடன் பணியாற்றி உள்ளனர். இதுவரை யாரும் என்மீது குறை சொன்னது இல்லை. நான் பெண்களிடம் நேர்மையாக நடப்பவன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com