நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை


நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Oct 2025 1:39 PM IST (Updated: 7 Oct 2025 4:44 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சுமார் 4.30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மும்பை,

மும்பை ஜூகு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் கோத்தாரி(வயது60). இவரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா தங்களின் `பெஸ்ட் டீல் டி.வி.' சேனலில் முதலீடு செய்யுமாறு ரூ.60 கோடியே 48 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வாங்கிய பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து தொழில் அதிபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த மாதம் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு வழக்கு மீதான விசாரணை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு குறித்து ஷில்பா ஷெட்டியின் கணவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து இன்று நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உட்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

1 More update

Next Story