

திருப்பதி,
பிரபல நடிகை தமன்னா பாட்டியா மற்றும் ’கப்புல் பிரெண்ட்லி’ பட நடிகை மானசா வாரணாசி ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில், இன்று நடிகை தமன்னா அவரது நடிகை மானசா விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் வழங்கினர். மேலும், தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பிறகு சாமி தரிசனம் முடித்துவிட்டு ஆலயத்தில் இருந்து வெளியே வந்த அவர்களுடன் பக்தர்கள் ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டனர்.
தற்போது இவர்கள் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.