வெளியானது பால் டப்பாவின் ‘ஏரோப்ளேன்’ இன்டீ பாடல்

இப்பாடலில் பால் டப்பாவுடன் அனன்யா ராம் பிரசாத் இணைந்து நடித்துள்ளார்.

வெளியானது பால் டப்பாவின் ‘ஏரோப்ளேன்’ இன்டீ பாடல்
Published on: 

சென்னை,

ராப் இசைக் கலைஞர் பால் டப்பா எழுதி, பாடி நடித்துள்ள ‘ஏரோப்ளேன்’ என்ற புதிய சுயாதீன இசைப்பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

பால் டப்பாவின் புதிய இசை ஆல்பம்

ராப் இசைக் கலைஞர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர் பால் டப்பா. இன்டீ பாடல் இசை உலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தொடர்ந்து புதிய பாடல்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் எழுதி, பாடி நடித்துள்ள ‘ஏரோப்ளேன்’ என்ற புதிய இசைப்பாடலை திங்க் இன்டி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பாடலில் பால் டப்பாவுடன் அனன்யா ராம் பிரசாத் இணைந்து நடித்துள்ளார்.

காதலர்களின் சந்திப்பு

ராகுல் அசோக் குமார் இயக்கியுள்ள இப்பாடலுக்கு அடியேல் மஸார் இசையமைத்துள்ளார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘காதல் வேணாம்னு சொன்னா காதல் பண்ண சொன்னாயே...’ என்ற வரிகளுடன் தொடங்கும் இப்பாடல், காதலில் பிரிந்த இருவர் விமானப் பயணத்தின்போது மீண்டும் சந்திப்பதை மையமாகக் கொண்டுள்ளது.

மீண்டும் சந்திக்கும் காதலர்களுக்கு இடையே ஏற்படும் உணர்வுகளையும், அவர்களது காதல் எதிர்கொள்ளும் சவால்களையும் காட்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். வித்தியாசமான காட்சியமைப்பும், இசையும் இணைந்துள்ள ‘ஏரோப்ளேன்’ பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com