பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் - நடிகை தனுஸ்ரீ பகீர் புகார்


After Claiming Theres An Attempt To Kill Her Like Sushant Singh Rajput, Tanushree Dutta Says, Ive Lived A Slow, Low-Key Sadhana Lifestyle
x

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படத்தில் பணிபுரிய இருந்ததாக நடிகை தனுஸ்ரீ கூறினார்.

மும்பை,

தனது உணவில் விஷம் கலக்க முயற்சி நடந்ததாக நடிகை தனுஸ்ரீ புகார் கூறி இருக்கிறார்.

நடிகர் நானா படேகர் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்திருந்த தனுஸ்ரீ, சமீபத்தில் அழுது வீடியோ வெளியிட்டது சமூக வலைதளங்களில் விவாத பொருளானது.

தற்போது பேட்டியளித்த அவர், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படத்தில் பணிபுரிய இருந்ததாக கூறினார்.

சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கும் தான் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கு இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

இதேபோல் நடிகை பூஜா மிஷ்ராவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளானதாக தனுஸ்ரீ கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் தன்னை சுற்றி விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தனது உணவில் விஷம் கலக்க முயற்சி நடந்ததாகவும் புகார் கூறி இருக்கிறார்.

1 More update

Next Story