தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஐஸ்வர்யா ராய் வழக்கு

அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஐஸ்வர்யா ராய் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஐஸ்வர்யா ராய் வழக்கு
Published on

புதுடெல்லி,

இந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தற்போது தொடர்ந்துள்ளார். அதில், அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல வலைத்தளங்கள் தனது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஏஐ-யால் உருவாக்கப்பட்ட அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும், டி சர்ட், பாத்திரங்கள், ஜாரில் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படம் பயன்படுத்துவதாகவும்,இதுதொடர்பாக இணையதளங்கள் அதிகளவில் பெருகி இருப்பதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து அத்தகைய அங்கீகாரம் இல்லாத போதிலும், அவரது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்யும் ஏராளமான வலைத்தளங்களை எடுத்துக்காட்டினார். இதனை பதிவு செய்து கொண்ட டெல்லி ஐகோர்ட்டு, பல்வேறு நோக்கங்களுக்காக நடிகரின் படங்களை அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தும் வலைத்தளங்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பிப்பதாக உறுதியளித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 18ம் தேதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com