ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Published on

சென்னை,

'வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்துக்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.

வாலாஜாபாத்திலிருந்து ஈசிஆர் செல்லும் 90 நிமிட பயணத்தில் ஒரு பெண் ஓட்டுநர் சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து, எப்படி தப்பிக்கிறார் என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'டிரைவர் ஜமுனா' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com