ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

'லாக்கப்' திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா சங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. டார்க் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே சரத் குமார் படத்தொகுப்பு செய்கிறார்.

'சொப்பன சுந்தரி' படத்தின் மோஷன் போஸ்டர், மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு தணிக்கைக்குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'சொப்பன சுந்தரி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com