லால் சலாம் பட தோல்விக்கு காரணம் இது தான் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரபரப்பு தகவல்

21 நாள்கள் எடுத்த லால் சலாம் காட்சிகள் காணாமல் போனதால்தான் பட தோல்விக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
லால் சலாம் பட தோல்விக்கு காரணம் இது தான் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரபரப்பு தகவல்
Published on

சென்னை,

பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற படம் லால் சலாம். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியே கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், பேட்ட பட்ஜெட்டை கூட எடுக்காமல் தேல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நேர்காணலில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தின் தோல்விக்கான காரணங்களை குறித்து கூறியுள்ளார்.

அதில், "லால் சலாம் படப்பிடிப்பில் 21 நாள்கள் எடுத்த காட்சிகள் காணாமல் போய்விட்டது. ஆயிரக்கணக்கான பேர் சூழ, 10 கேமராக்கள் வைத்து கிரிக்கெட் போட்டியை ஹுட் செய்தோம். இவை அனைத்தும் காணாமல் போய்விட்டது. மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்று தொலைந்த ஹார்ட் டிஸ்க்கில் (hard disk) இருந்த காட்சிகளை எடுக்கலாம் எனச்சொன்னார்கள். ஆனால், அது கடினமானது என்பதால் இருக்கும் காட்சிகளை வைத்தே படத்தை எடிட்டிங் செய்தோம்.

ஹார்ட் டிஸ்க் தொலையாமல் இருந்திருந்தால் நாங்கள் சொல்ல வந்த கருத்தை இன்னும் தெளிவாகக் கூறியிருப்போம் எனக் கூறினார்.

தெடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கெள்வதாகவும் ஒரு இயக்குநராக இது தனக்கு பெரிய அனுபவமாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

ஐஸ்வர்யா, நேர்மையாக தனது படத்தின் தேல்வி குறித்து பேசியுள்ள விஷயம், ரஜினி ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மற்றொரு தரப்பினர், படத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது என பொய் சொல்லக் கூடாது என்றும் "தயாரிப்பாளர் பணம்தானே? உங்கள் பணமாக இருந்தால் இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்வீர்களா?" என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சுமார் 75 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட லால் சலாம் திரைப்படம், மொத்தமாக சுமார் 16 கோடிதான் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com