'வேட்டையன்' திரைப்படம் வெற்றி பெற ஐஸ்வர்யா சிறப்பு வழிபாடு

'வேட்டையன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'வேட்டையன்' திரைப்படம் வெற்றி பெற ஐஸ்வர்யா சிறப்பு வழிபாடு
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடலுக்கு மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

நேற்று வெளியான இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'வேட்டையன்' படம் வெற்றி பெற கோவிலுக்கு சென்றுள்ளார்.

அதாவது, காரைக்கால் மாவட்டம் திருநாள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'வேட்டையன்' திரைப்படம் வெற்றிபெற சிறப்பு வழிபாடு செய்துள்ளார். மேலும் குடும்பத்தினர் ஒவ்வொருவரின் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com