'ரெய்டு 2' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு


Ajay Devgns Raid 2 to release in theatres in February 21
x
தினத்தந்தி 11 Sept 2024 4:43 PM IST (Updated: 24 March 2025 4:55 PM IST)
t-max-icont-min-icon

அஜய் தேவ்கன் நடிக்கும் 'ரெய்டு 2' படத்தில் கதாநாயகியாக வாணி கபூர் நடிக்கிறார்.

சென்னை,

அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இதில் தேவ்கன் ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரெய்டு படத்தின் தொடர்ச்சியாக ரெய்டு 2 உருவாகியுள்ளது. இதில், அஜய் தேவ்கன், வாணி கபூர் மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ராஜ் குமார் குப்தா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் வில்லனாக நடிக்கிறார்.

பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிப்பில்உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் முன்னதாக நவம்பர் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ரெய்டு 2 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

'ரைடு 2' படத்தை தொடர்ந்து, 'சிங்கம் அகெய்ன்' , சன் ஆப் சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். இதில், 'சிங்கம் அகெய்ன்' தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

1 More update

Next Story