அஜித் 10,000 கி.மீ. தூரம் பைக் பயணம்

சில வாரங்களுக்கு முன்பு நண்பர்களுடன் வட மாநிலங்களில் பைக் பயணத்தை தொடங்கினார்.
அஜித் 10,000 கி.மீ. தூரம் பைக் பயணம்
Published on

நடிகர் அஜித்குமார் நீண்ட தூர பைக் பயணத்தில் ஆர்வம் உள்ளவர். சில வாரங்களுக்கு முன்பு நண்பர்களுடன் வட மாநிலங்களில் பைக் பயணத்தை தொடங்கினார். காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் சாரநாத், வாரணாசி பகுதிகளுக்கு சென்றார். வாரணாசியில் தெருவோரத்தில் இருந்த ஒரு சாட் மசாலா கடைக்கு சென்று உணவு சாப்பிட்டார். சாலையோரத்தில் கடை வைத்து வியாபாரம் செய்த ஒருவரது மகன் படிப்பு செலவை ஏற்றதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து பைக் பயணம் செய்தபோது வழியில் அஜித்தை அடையாளம் கண்டவர்கள் அவருடன் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். தற்போது பைக் பயணத்தை அஜித் முடித்துவிட்டு திரும்பி உள்ளார். சென்னை-கோவை-சென்னை-ஐதராபாத்-வாரணாசி-காங்டாக்-லக்னோ-அயோத்யா-ஐதராபாத்-சென்னை என்று 10 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் பைக் பயணத்தை அஜித்குமார் முடித்துவிட்டதாக உடன் பயணித்தவர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com